அனைவரும் ஒன்றிணைந்து காற்று மாசுபாட்டை தடுப்போம் - விராட் கோஹ்லி

kohli message for delhi peoples

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அசுத்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு பல்வேறு சுவாச பிரச்சனை, இதயம், நுரையிறல் போன்றவை பாதிப்படையலாம் என்று சுற்றுசூழல் ஆய்வகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி அரசு காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த காற்றுமாசுபாடு போக்குவரத்து அதிகரிப்பால் அதிகமாகி வருகிறது இதனால் அனைவரும் தனியார் பேருந்துகளை விடுத்து அரசு பேருந்துகளை உபயோகிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி காற்று மாசுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இதனை ஒரு வீடியோவாக தனது டிவிட்டர் தலத்தில் வெளியிட்டுள்ளார். அதில் " டெல்லியில் காற்று மாசுபாடு எந்த அளவிற்கு உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்வது என்று ஏராளமான மக்கள் விவாதம் செய்து வருகின்றனர். அனைவரும் இந்த காற்று மாசுபாட்டிற்கு எதிராக களம் இறங்க வேண்டும். காற்று மாசுபாட்டை குறைக்க முக்கியமாக டெல்லி மக்கள் உதவி செய்ய வேண்டும். இது நம்முடைய முக்கிய கடமையாகும். அனைவரும் தங்களது பயணங்களை அரசு பேருந்து, மெட்ரோ, ஓலா மற்றும் ஷேர் இவற்றை தொடர்ந்து உபயோகித்தால் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


அனைவரும் ஒன்றிணைந்து காற்று மாசுபாட்டை தடுப்போம் - விராட் கோஹ்லி