ads

நீரவ் மோடியை தொடர்ந்து 800 கோடி மோசடியில் அடுத்த தொழிலதிபர்

800 crore defaulter rotomac pen company owner vikram kothari arrested

800 crore defaulter rotomac pen company owner vikram kothari arrested

வைர நகை வியாபாரியான நிரவ் மோடி, 11 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியுள்ள நிலையில் தற்போது அடுத்ததாக 5 வங்கிகளிடம் இருந்து 800 கோடி ரூபாய் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற மற்றொரு தொழிலதிபரான ரோடேமேக் பேனா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரியை தற்போது சிபிஐ கைது செய்துள்ளது.

ரோடோமேக் பேனா நிறுவனம் உத்தர பிரதேச மாநிலத்தில் கார்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான விக்ரம் கோத்தாரி பல்வேறு துறையை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து 800 கோடி வரை கடன் வாங்கி ஏமாற்ற முயன்றுள்ளார். மேலும் விசாரணையில் மோசடி ஆவணங்கள் மூலமாக கடந்த ஓராண்டாக வட்டி கூட வங்கிகளுக்கு செலுத்தவில்லை.

இந்நிலையில் ரோடோமேக் நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டுள்ளது.  இதனால் ஒரு வாரமாக விக்ரம் கோத்தாரி எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதனால் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார், வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயலலாம் என்று யூகத்தில் சந்தேப்பட்டுள்ளனர்.

இவர் அலகாபாத் வங்கியிடமிருந்து, 352 கோடி மற்றும்  யூனியன் பாங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து, 485 கோடி ரூபாய் என பல்வேறு துறைகளை சார்ந்த வங்கிகளிடம் இருந்து, அவர், 800 கோடி ரூபாய் வரை கடன்வாங்கியுள்ளார். இதனை அடுத்து விக்ரம் கோத்தரிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர். பின்னர் தற்போது அவரை சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

நீரவ் மோடியை தொடர்ந்து 800 கோடி மோசடியில் அடுத்த தொழிலதிபர்