நயன்தாராவை வைத்து திருடனை பிடித்த பீகார் போலீஸ்

By : Yasodha        Published On : Dec 23, 2017 09:45 IST    
Bihar gangster falls for actress Nayanthara gets arrested Bihar gangster falls for actress Nayanthara gets arrested

பீகாரில், பாட்னாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பாஜக தலைவர் சஞ்சய் குமார் மகதோ என்பவரின் விலையுயர்ந்த மொபைல் போன் முகமத் அஸ்நைன் என்பவரால்  திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்ததில் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்த வழக்கு சீனியர் காவல் அதிகாரி மதுபாலா தேவி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருடப்பட்ட இந்த மொபைலுக்கு வந்த அழைப்புகளை போலீசார் கண்காணித்தனர். இதன் மூலம் இந்த மொபைலை முகமத் அஸ்நைன் உபயோகித்து வருவதாக முடிவுக்கு வந்தனர். ஒவ்வொரு முறையும் போலீசார் முகமத் அஸ்நைனை பிடிக்க முயலும்போது எப்படியாவது சமாளித்து தப்பித்துவிடுவார்.இதனால் மகளிர் காவல் அதிகாரியான மதுபாலா தேவி என்பவர் திட்டத்தில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.இவரை பிடிக்க முகமத் அஸ்நைனை காதலில் சிக்க வைக்க போலீசார் முடிவு செய்தனர். முதலில் முகமத் அஸ்நைனைதொடர்பு கொண்டு அவரை காதலிப்பதாக தெரிவித்தார். ஆனால் முதலில் முகமத் அஸ்நைன் எனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த பின்பு உன்னுடைய புகைப்படத்தை அனுப்பு என்று கேட்டுள்ளார். அதன்படி போலீசார் அவருக்கு நடிகை நயன்தாரா புகைப்படத்தை அனுப்பி தர்பங்கா சிட்டியில் உள்ள இடத்திற்கு வரும்படி தெரிவித்தனர். இதுவரை நயன்தாராவை கண்டிராத முகமத் அஸ்நைன் நயன்தாராவை பிடித்து போய் போலீசார் தெரிவித்தபடி அவர்கள் வரச்சொன்ன இடத்திற்கு வந்துள்ளான். இதனை அடுத்து மதுபாலா தேவி என்பவர் 'பர்தா' அணிந்து தனது அடையாளத்தை மறைத்து திருடன் முகமத் அஸ்நைனிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதனால் அவனுக்கு அவரை அடையாளம் காண முடியவில்லை. உடனே சுற்றி வலைத்த போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது இந்த மொபைலை 4500 ரூபாய் கொடுத்து மற்றொரு நபரிடம் வாங்கியதாக தெரிவித்தான். முகமத் அஸ்நைன் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த மற்றொரு நபரையும் விரைவில் பிடிப்போம் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர். திறமையாக திட்டம் தீட்டி கைது செய்த மகளிர் காவல் ஆணையர் மதுபாலா தேவி என்பவருக்கு பீகார் காவல் நிலையம் பாராட்டு தெரிவித்து விருது வழங்கவுள்ளது. இதன்மூலம் நடிகை நயன்தாரா பீகார் மாநிலத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

Bihar gangster falls for actress Nayanthara gets arrestedBihar gangster falls for actress Nayanthara gets arrested

நயன்தாராவை வைத்து திருடனை பிடித்த பீகார் போலீஸ்