ads

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரை கவுரவித்த கூகுள்

first indian photojournalist

first indian photojournalist

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஓமாயி வியாரவாலாவின் 104 வது பிறந்த நாளான இன்று கூகுள் நிறுவனம்  தனது கூகுள் டூடுள் (Google Doodle) மூலம் அவரை கவுரவித்துள்ளது. ஓமாயி வியாரவாலா, இவர் இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் என்று அங்கீகரிக்கப்பட்டவர். இவர் 1913-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள நவ்சாரி பகுதியில் பார்சி குடும்பத்திற்கு மகளாக பிறந்தார். 

பின்னர் தனது புகைப்பட வாழ்க்கையை 1940-ஆம் ஆண்டு தொடங்கினார். ஆரம்ப காலங்களில் அவருடைய கணவரின் பெயரில் அவரது புகைப்படங்களை வெளியிட்டார். இதனை அடுத்து 1942-இல் பிரிட்டிஷ் தகவல் தொடர்பு (BIS) சேவையில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை படம் பிடித்துள்ளார். மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 1947, ஆகஸ்ட் 15-இல் இந்தியாவின் முதல் தேசியகொடி ஏற்றப்பட்டபோது  படம் பிடித்த பெருமைமிக்கவர். இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்பேட்டன் பிரபு, ஜவஹர்லால் நேரு சந்திப்பை படம்பிடித்த பெருமையும் இவரையே சாரும்.

 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் 'தல்டா 13' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த பெயரை அவர் தேர்ந்தெடுத்த காரணம் அவர் தனது 1913-ஆம் ஆண்டு பிறந்தார், தனது கணவனை 13வது வயதில் சந்தித்தார். மேலும் இவருடைய முதல் காரின் எண்ணானது 'DLD 13'. 2012-ஆம் ஆண்டு ஜனவரி 15-இல் வீட்டின் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மறைவின்போது இவருக்கு வயது 98.

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரை கவுரவித்த கூகுள்