ads

கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து இசைக்கிமுத்து குடும்பம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதற்கு காரணம் அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் என்று பலரும் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து கார்ட்டூனிஸ்ட் பாலா, முதல்வர், நெல்லை ஆட்சியர் மற்றும் நெல்லை காவல் ஆணையர் இவர்களை வைத்து கேலி சித்திரம் ஒன்றை வரைந்து வெளியிட்டார். இந்த கார்ட்டூனை ஆத்திரத்தில் உச்சத்தில் வரைந்ததாக அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். இதனால் அவர் மீது நெல்லை ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் புகார் தெரிவித்தனர். 

இதனை அடுத்து நெல்லை குற்றபிரிவு போலீசார் மப்டியில் அவரை இரவு நேரத்தில் கைது செய்ய வந்தனர். அவர்களிடம் முறையான  ஆதாரங்களை காட்ட சொன்னதால் போலீசாருக்கும் பாலா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின் அவரை வெளியே இழுத்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து சென்றுள்ளனர். இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாலா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்தாஸ் அவரை இருநபர் ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் அவரை 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்