ads

மழை புயலால் அலறும் தென்மாவட்டங்கள்

heavy rain becomes ochi cyclone

heavy rain becomes ochi cyclone

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் 170 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக மாற  வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது 167 கி.மீ முதல் 200 கி.மீ வேகத்திற்கு காற்று வீசும். இந்த புயலை காரணமாக தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எண்ணூர் துறைமுகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

காசிமேடு, எண்ணூர், திருவெற்றியூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளிவர வேண்டாம் என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழை புயலால் அலறும் தென்மாவட்டங்கள்