பனப்பாக்கம் அரசு பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் தற்கொலை

By : JackMohan        Published On : Nov 26, 2017 08:28 IST    
school girls suicide school girls suicide

வேலூர் பணப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற நான்கு மாணவிகள்  விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சர்ச்சையாக கிளம்பியுள்ளது. தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகளும் ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்புப்படித்து வந்துள்ளனர். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியர்கள் திட்டியதோடு பெற்றோர்களை வரவழைத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவிகள் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து இறந்த நான்கு மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்து உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து பணப்பாக்க பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் தற்கொலைக்கு காரணமான லல்லி என்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளின் மரணத்திற்கு ஆறுதல் சொன்ன மீனாட்சி என்பவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று புகார் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுவந்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 


பனப்பாக்கம் அரசு பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் தற்கொலை