ஜிஎஸ்டி குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்

By : Velu        Published On : Nov 25, 2017 18:55 IST    
peoples inform gst complaints peoples inform gst complaints

 சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பின்னரும் முந்தய வரி வசூலித்து அதிக லாபம் பெரும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களின் மீது பொதுமக்கள் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "பெருவாரியான பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. மேலும் பல பொருட்களுக்கான வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் தற்போது 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஏ.சி மற்றும் சாதாரண விடுதிகளுக்கு வழங்கப்பட்ட 18 சதவீத வரியை 12 சதவீதமாக குறைத்துள்ளது. பொருட்களை மக்கள் வாங்கும்போது பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி வசூலிக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். www.cbec.gov.in என்ற வலைத்தளத்தில் மாற்றம் செய்த புதிய வரிகளுக்கான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளலாம். ஜிஎஸ்டியின் கொள்ளை லாப தடுப்பு சட்டத்தின்படி குறைக்க பட்ட வரி விகித அடிப்படையில் நிறுவனங்களும், வியாபாரிகளும் மக்களுக்கு அளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் பெரும் கூடுதல் லாபத்தை வட்டியுடன் சேர்த்து மக்களுக்கு வழங்க சட்டம் வகை செய்கிறது. மீறுவோரின் மீது அவருடைய வர்த்தக உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க படும். இதற்காக தனியாக அமைக்கப்பட்ட குழு உள்ளது. இந்த குழுவிடம் கொள்ளை லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மீது மக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த பிரிவுகளிடம் ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிகளை அனைவரும் பெறலாம்." என்று தெரிவித்துள்ளது. 


ஜிஎஸ்டி குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்