இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்

rajinikanth fans meet

நடிகர் ரஜினிகாந்த் வரும் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு நாளும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார். முதல் நாளாக நேற்று சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். இதில் கதாசிரியர் கலைஞானம் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக தெரிவித்திருந்தார். மேலும் நான் அரசியல் நிலைப்பாட்டை பற்றி தான் அறிவிக்க போகிறேன், அரசியலுக்கு வருவானோ வருமாட்டானோ என்று அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே 'இவர் வருவாரா?..வரமாட்டாரா?..' என்று சலசலப்பு நிகழ்ந்தது. இன்று இரண்டாம் நாளாக ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அவர் "எனது ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்புக்கு இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள்." என்று தெரிவித்துள்ளார்.

rajinikanth fans meet
rajinikanth fans meet