51 மருந்து பொருட்களின் விலை குறைப்பு

medical tablets

தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் தேசிய அளவில் மருந்து பொருட்களின் விலையை கட்டுப்படுத்த செயல்பட்டு வருகிறது. நேற்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 36 உயிர் காக்கும் மருந்துகளின் குறைத்துள்ளது. மேலும் 15 மருந்துகளின் உச்ச வரம்பு விலை குறைக்கப்பட்டது. இதன் மூலம் மருந்துகள் 6 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலை குறையும் என்று தேசிய மருந்து பொருட்களின் விலை நிர்ணய ஆணையர் தெரிவித்துள்ளார்.இந்த சதவீதத்திற்கும் மேல் விற்கும் நிறுவனங்கள் உடனடியாக மருந்து பொருட்களின் விலையை குறைக்க அவர் தெரிவித்துள்ளார். இதய கோளாறுகள், அலர்ஜி, புற்று நோய் உள்பட உயிர் காக்கும் மருந்துகள் இந்த பட்டியலில் அடங்கும். எடுத்துக்காட்டாக பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றிற்கான சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஊசி மருந்துகளின் விலை 28 சதவீதம் குறைய உள்ளது. புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகளின் விலை 48 சதவீதம் குறைகிறது.


51 மருந்து பொருட்களின் விலை குறைப்பு