ads

ஹார்வர்ட் பல்கலைகழக தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் நிதியுதவி

harvard university tamil chair

harvard university tamil chair

 உலக தரவரிசையில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருக்கிறது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழி அமைய முயற்சிகள் நடைபெற்று வந்தது. தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைய ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக 40 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து தமிழின மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இதற்காக பல்வேறு இடங்களில் நிதி திரட்டி வந்துள்ளனர்.

 சினிமா பிரபலங்களான விஷால், சூர்யா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கமல் போன்றோர் தங்களது பங்களிப்பாக நிதியுதவி வழங்கியுள்ளனர். தமிழக அரசு தனது சார்பில் 10 கோடி அளித்துள்ளது. இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பாக ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் மொத்தமாக 2 கோடி தங்களது பங்களிப்பாக அளித்துள்ளனர். தமிழாசிரியர்களின் இந்த தீர்மானத்திற்கு அனைத்து தமிழின மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹார்வர்ட் பல்கலைகழக தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் நிதியுதவி