இப்படை வெல்லும் படத்திற்கு பென்ஸ் விருது

benze award to ippadai vellum movie

இயக்குனர் கவுரவ் நாராயணன் 2011-ஆம் ஆண்டு வெளியான 'தூங்கா நகரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நான் ராஜாவாக போகிறேன், சிகரம் தோடு, ஆறாது சினம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகராகவும் சில படங்களில் நடித்து தனது திறமையையே வெளிப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2017, நவம்பர் 9-ஆம் தேதி 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பிரவீன் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் நடிகர்கள் ஆர் கே சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா சரத்குமார், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளது. இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு 2017-ஆம் ஆண்டின் சிறந்த ஆக்சன் த்ரில்லர் படமாக 'பென்ஸ் விருது' கிடைத்துள்ளது. இதனை இந்த படத்தின் இயக்குனர் கவ்ரவ் நாராயணன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு இந்த படத்தின் நாயகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நன்றியை தெரிவித்துள்ளார்.


இப்படை வெல்லும் படத்திற்கு பென்ஸ் விருது


  Tags : 
 • ippadai vellum movie reviews
 • ippadai vellum movie story
 • ippadai vellum movie cast
 • ippadai vellum movie director
 • director Gaurav Narayanan history
 • director gaurav narayanan movies
 • director gaurav narayanan movie history
 • director gaurav narayanan first movie
 • 2017 benze award to ippadai vellum movie
 • 2017 best action thriller movie ippadai vellum movie
 • thoonga nagaram director gaurav narayanan first movie
 • இயக்குனர் கவுரவ் நாராயணன்
 • இயக்குனர் கவுரவ் நாராயணன் முதல் படம்
 • தூங்கா நகரம் இயக்குனர் கவுரவ் நாராயணன் முதல் படம்
 • இப்படை வெல்லும் படத்திற்கு பென்ஸ் விருது
 • 2017 ஆண்டின் சிறந்த த்ரில்லர் படம் இப்படை வெல்லும்