வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் பட்டியல்

2017 latest actress

நிக்கி கல்ராணி :தமிழ் திரையுலகில் 'டார்லிங்' படத்தின் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணி 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் இடம் பெற்ற 'குத்தீட்டு கண்ணுல' பாடல் ரசிகர்கள் அனைவரும் கவரும் வகையில் அமைந்தது. இதன் பின்னர் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இளம் நடிகைகளின் முன்னணியாக திகழ்ந்து வருகிறார்.அதிதி பாலன் :   கடந்த டிசம்பர் மாதத்தில் வெளிவந்து இன்றளவும் வெற்றிகரமாக பல  திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் 'அருவி' படத்தின் மூலம் முதல் முறையாக நாயகியாக அறிமுகமான அதிதி பாலன் முதல் படத்திலையே அவரின் மதிப்பு அதிகளவு உயர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு நாயகியாக வளம் வருகிறார். அருவி படத்தில் அவரின் நடிப்பிற்கு திரையுல வட்டாரம் முதல் ரசிகர்கள், விமர்சனங்கள் வரை நல்ல வரவேற்பை கொடுத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி மாபெரும் வெற்றியாக அமைந்ததால் அதிதியின் வரவேற்பு அதிகரித்துள்ளது.    பிரியா பவானி சங்கர் :'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் முறையாக 'மேயாத மான்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையிலும் அவருக்கு கொடுத்திருந்த காட்சியில் சிறப்பாக நடித்ததின் மூலமும் அவரது மார்க்கெட் உயர்ந்தது. இதன் மூலம் தற்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகரித்து சில படங்களில் நடித்து வருகிறார். நிவேதா பெத்துராஜ் :'ஒரு நாள் கூத்து' படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசதக்க அளவிற்கு உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினிக்கு ஜோடியாக 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். தற்பொழுது இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமான 'டிக் டிக் டிக்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் சிலர் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.     


வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் பட்டியல்


  Tags : 
 • 2017 latest actress in kollywood
 • 2017 latest heroines
 • latest heroines in 2017
 • top 10 talest heroines
 • latest popular tamil actress
 • 2017 latest popular actress
 • latest tamil actress
 • 2017 popular heroines
 • 2017 popular actress
 • வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் பட்டியல்
 • தமிழ் திரையுலகின் இளம் நடிகைகளின் பட்டியல்
 • தமிழில் இளம் நடிகைகளின் பட்டியல்
 • வளர்ந்து வரும் இளம் நடிகைகள்
 • இளம் நடிகைகள் பட்டியல்
 • பிரியா பவானி சங்கர்
 • நிக்கி கல்ராணி
 • அதிதி பாலன்
 • நிவேதா பெத்துராஜ்
 • nivetha penthuraj
 • aditi balan
 • nikki galrani
 • priya bhavani shankar