ads

தேசிய அளவில் 2017-ஆண்டுக்கான டாப்10 சிறந்த படங்கள்

2017 top best movies

2017 top best movies

 2018 ஆம் ஆண்டு புது வருடப்பிறப்பிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில்  2017 ஆம் ஆண்டிற்கான, ரசிகர்களின் விமர்சனங்கள் வாயிலாக சிறந்த படங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில், கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை சினேகா இணைந்து நடித்த 'தி கிரேட் பாதர்' படம் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் அனீஃப் அடெனி இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆகஸ்ட் சினிமா சார்பில் பிரிதிவிராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் மம்மூட்டி, சினேகா, ஆர்யா, பேபி நானிகா உள்பட பலர் நடித்துள்ளனர். 

ஒன்பதாவது இடத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளி அன்று வெளிவந்த 'மெர்சல்' படம் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, வடிவேல், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவால் இந்த படம் 1.3 பில்லியன் இந்தியன் ரூபாயில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனை அடுத்து எட்டாவது இடத்தில் இயக்குனர் கபூர் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'ஜோலி எல்எல்பி 2' படம் உள்ளது. இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார், அன்னு கபூர், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஏழாவது இடத்தில் இயக்குனர் ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியான இந்தி படமான 'டாய்லெட் - ஏக் பிரேம் கதா' உள்ளது. இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார், அனுபம் கேர், பூமிகா பேட்னேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை அனுபம் ஆகியோர் இதுவரை 20 படங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஆறாவது இடத்தில் இந்தியாவின் முதல் கடல்போர்/ தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட திரைப்படமான 'தி காஸி அட்டாக்' உள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அதாவது 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின் போது 'பிஎனஎஸ் காஸி' மூழ்கடிக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டது. இந்த படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராணா டகுபதி, அதுல் குல்கர்னி, டாப்ஸி, கே கே மேனன், ராகுல் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் தனது குரலை வழங்கியுள்ளார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியும், தமிழில் நடிகர் சூர்யாவும் தனது குரலை வழங்கியுள்ளனர். இந்த படம் பிப்ரவரி 17-இல் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியானது.

மேலும் ஐந்தாவது இடத்தில் மே மாதம் 19-ஆம் தேதி வெளியான 'ஹிந்தி மீடியம்' என்ற படம் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஷாகீத் சாதாரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் இர்பான் கான், பாகிஸ்தான் நடிகையான சபா காமர், தீபக் டொப்ரியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் மட்டாக் பிலிம்ஸ் சார்பில் தினேஷ் விஜன், பூஷன் குமார், க்ரிஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நான்காவது இடத்தில் அக்டோபர் 19-இல் வெளியான 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படம் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆட்வைட் சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆமிர் கான் ப்ரொடக்சன் சார்பில் ஆமிர் கான், கிரண் ரோ, ஜீ ஸ்டூடியோ, ஆகாஷ் சாவ்லா, சுஜய் குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் செய்றா வாசிம், ஆமிர் கான், ராஜ் அருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது. இந்த படத்தை நடிகர் ஆமிர் கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இதனை அடுத்து மூன்றாவது இடத்தில் ஆகஸ்ட் 25-இல் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இந்த படத்தை பத்ரகாளி பிக்ச்சர்ஸ் சார்பில் பிரணாய் ரெட்டி வங்கா தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்தின் தமிழில் ரிமேக் நடந்து வருகிறது. தமிழில் இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'வர்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் துருவ் விக்ரம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

இரண்டாவது இடத்தில் ஏப்ரல் 28-இல் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி 2' உள்ளது. இந்த படம் 'பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜமௌலி 250 கோடி பொருட்செலவில் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக நடிகர் பிரபாஸ் 4 வருடம் தனது திரையுலக வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்த படத்தை அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு யார்லகதா, பிரசாத் தேவினெனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

மேலும் முதல் இடத்தில் இயக்குனர் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் ஜூலை 21-இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்து திரையுலகை வட்டாரங்களை திரும்பி பார்க்க வைத்த 'விக்ரம் வேதா' உள்ளது. இந்த படத்தில் நடிகர் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வைய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ளார். பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது 100 வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக படப்பிடிப்பின்போது சண்டை காட்சிக்காக 3000 புல்லட்களை உபயோகபடுத்தியுள்ளனர்.

2017 top best movies 2017 top best movies
2017 top best movies 2017 top best movies
2017 top best movies 2017 top best movies
2017 top best movies 2017 top best movies

தேசிய அளவில் 2017-ஆண்டுக்கான டாப்10 சிறந்த படங்கள்