தமிழ் திரையுலகில் 2017ம் ஆண்டின் டாப் நாயகிகள்

2017 top heroines

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் பலர் இருந்தாலும் வருடம் முடிவில் அதிகளவு ஹிட் கொடுக்கும் நாயகியாகிள் குறைவாகவே உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டில் டாப் இடத்தை பிடித்த முன்னணி நாயகிகள்.



நயன்தாரா :



நயன்தாரா சில வருடங்களாகவே முன்னணி இடத்தை பிடுத்து வருவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் கவரும் வகையில் அமைந்து விடுகிறது. இதன் காரணத்தினால் திரையுலகில் அவருக்கென ஒரு தனி இடமே கிடைத்துள்ளது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த 'அறம்' படத்தின் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை வலுப்படுத்தியதோடு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் செய்தார். இந்த படத்தின் மூலம் விகடன் விருதையும் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'வேலைக்காரன்' படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.  



கீர்த்தி சுரேஷ் :    



'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற 'ஒமேல ஒரு கண்ணு' பாடலின் மூலம் அதிகளவு பிரபலமானார். இப்படத்தில் கீர்த்தியின் நடிப்பு ரசிகர்கள் அனைவரும் கவரும் வகையில் அமைந்தது. இதற்கு அடுத்த படியாக தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்பொழுது நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவந்து மாபெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடந்து சீயான் விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.     



சமந்தா :



'அஞ்சான்' படத்தின் மூலம் சமந்தா மாபெரும் வெற்றி பெற்றார். இதன் பின்னர் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம் போன்றவர்களிடம் இணைந்து நடித்து திரையுலகில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்தார். திருமணத்திற்கு பின்னரும் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதோடு வரலாற்று சார்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.  



அனுஷ்கா ஷெட்டி : 



தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைத்து தமிழ் திரையுலகிலும் முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்தார். இதனை தொடர்ந்து வரலாற்று சார்ந்த படமான பாகுபலி 1,2 படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருந்தார். தற்பொழுது 'பாகமதி' என்னும் அதிரடி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்    


தமிழ் திரையுலகில் 2017ம் ஆண்டின் டாப் நாயகிகள்