துருவ நட்சத்திரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு

dhruva natchathiram movie shooting

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘இருமுகன்’படத்தின் வெற்றியை தொடர்ந்து சீயான் விக்ரம் தற்பொழுது கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவநட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' மற்றும் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்பொழுது வெளிவந்த தகவலில் வரலாற்று சார்ந்த 'மஹாவீர் கர்ணா' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் 

இயக்கவுள்ளார்.     விஜய் சந்தர் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் காரைக்குடி நகரத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் அதிரடி த்ரில்லராக உருவாக்கி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வருகிற 25ம் தேதி துவங்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. 

   

கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் கெளதம் மேனனுக்கு சொந்தமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக ‘பெல்லி சூப்புலு’ புகழ் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு நாயகிகள் களமிறங்கியுள்ளனர். இவர்களுடன் இணைந்து முக்கிய வேடத்தில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா போன்றவர்கள் நடித்துவருகின்றனர். 


துருவ நட்சத்திரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு


  Tags : 
 • dhruva natchathiram final schedule
 • dhruva natchathiram final shooting start from janauary 25th
 • dhruva natchathiram final schedule this month end
 • dhruva natchathiram final schedule january 25th
 • dhruva natchathiram shooting schedule
 • Dhruva Natchathiram
 • துருவ நட்சத்திரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு
 • துருவ நட்சத்திரம்
 • ஜனவரி 25ல் துவங்கும் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு
 • ஜனவரி 25ல் துவங்கும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு
 • விக்ரமின் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு
 • துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு
 • சீயான் விக்ரம்