சூப்பர் ஸ்டாரின் காலாவால் தள்ளிப்போன மிஸ்டர் சந்திரமௌலி

mr chandramouli movie release date postponed due to kaala release

தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்தது.



ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' அதே நாளில் ஏப்ரல் 27 இல் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் வெளியீடு தேதியை மாற்ற முடிவு செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த படத்தின் மூலம் முதன் முறையாக நடிகர் கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், அகத்தியன், சந்தோஷ் பிரதாப், விஜய் சந்திரசேகர், சதிஷ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.



இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கிரியேட்டிவ் என்டேர்டைனர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் போப்டா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் தயாரித்து வருகிறார். இவர் முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ளார். 


சூப்பர் ஸ்டாரின் காலாவால் தள்ளிப்போன மிஸ்டர் சந்திரமௌலி