ads

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜீரோ

shah rukh khan new movie titled as zero

shah rukh khan new movie titled as zero

1992-ஆம் ஆண்டு வெளியான 'தீவானா' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஷாருக்கான் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் ஆனந்த் எல் ராய் என்பவருடன் இணைந்து புதுப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது 'ஜீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் கலர் எல்லோ ப்ரொடக்சன் சார்பில் கௌரி கான் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இமான்சு சர்மா வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான், கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்த படத்தின் மூலம் இணைகின்றனர். 

மேலும் 2012-இல் வெளியான 'ஜப் தக் ஹை ஜான்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஷாருக்கான், கத்ரீனா, அனுஷ்கா ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு ஜாம்8, பத்சா, தனிஷ்க், அஜய்-அதுல் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் ஷாருக்கான் உயரம் குறைந்த மனிதராக நடித்துள்ளார். இதனை தெரிவிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் தலைப்பை தெரிவித்து இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றதுடன் வைரலாகி வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 21-இல் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜீரோ