ads

தானா சேர்ந்த கூட்டம் அதிகார பூர்வ அறிவிப்பு

thaana serntha kootam gang movie release on same time

thaana serntha kootam gang movie release on same time

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.  

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது', 'நானா தானா..', 'பீலா பீலா..' போன்ற பாடல்கள் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் டைட்டில் பாடலின் டீசரை வரும் டிசம்பர் 30-ஆம் தேதி (நாளை) வெளியிடுவதாகவும், முழு ஆல்பம் ஜனவரி 3-ஆம் தேதி வெளியிடுவதாகவும் அனிருத் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். 

இந்த படம் தெலுங்கில் கேங் என்ற தலைப்பில் வெளியிடவுள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ல் வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் மாற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரே நேரத்தில் திரையிட முடிவு செய்துள்ளனர். 

தானா சேர்ந்த கூட்டம் அதிகார பூர்வ அறிவிப்பு