ads

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிகர் ஆர்யா

arya in iruttu araiyil murattu kuthu movie

arya in iruttu araiyil murattu kuthu movie

நடிகர் ஆர்யா 2005-இல் வெளியான 'அறிந்தும் அறியாமலும்'  படத்தின் மூலம் நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு திறமைக்கு தென் இந்தியாவின் சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் இவருடைய 'நான் கடவுள்' படம் சிறந்த நடிகருக்கான விஜய் அவார்ட் மற்றும் பிலிம் பேர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த 'அவன் இவன்' படத்தில் இவருடைய கதாபத்திரங்கள் தற்போது வரை மக்கள் மத்தியில் பேசும்படமாக அமைந்துள்ளது.

இவருடைய நடிப்பில் இறுதியாக 'கடம்பன்' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் 'கஜினிகாந்த்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேஇ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தையும் கேஇ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடிகர் ஆர்யா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது "இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஒரு நாள் என்னை இருட்டு அறையில் முரட்டு குத்து படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் திடீரென்று கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஆட வைத்துவிட்டார். இந்த படத்தில் நடனம் ஆடுவேன் என்று நினைத்து பார்க்க வில்லை. இயக்குனருக்கும் அந்த எண்ணம் இல்லை தீடீரென தோன்றிய எண்ணம் தான்." என்று தெரிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிகர் ஆர்யா