ஜீவாவின் 30வது படத்தின் புதிய தகவல்

actor jiiva new film updates

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்பொழுது காலீஷ் இயக்கத்தில் 'கீ', சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜீவாவின் 29வது படத்தின் தகவல் சிலநாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தகவலில் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே இணைந்திருப்பதாகவுன் படத்திற்கு 'கொரில்லா' என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் வலைதளத்தின் மூலம் படக்குழு தகவலை தெரிவித்தது. மேலும் இப்படத்தில் சிம்பான்சி குரங்கு இடம் பெறுவதாகவும் அதற்கு முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளது. இதற்காக சிம்பான்சி குரங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக படக்குழு தகவலை வெளியிட்டிருந்தனர்.   இந்நிலையில் ஜீவாவின் 30வது படத்தின் தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது. இந்த படத்தினை இயக்குனர் சாய் ரமணி இயக்கவுள்ளார். இவர் ஜீவாவின் 'சிங்கம் புலி', ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவா கேட்ட சிவா' படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியில் படப்பிடிப்பு, டைட்டில், நாயகி, இதர நடிகர் -நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், கலை கலைஞர் போன்றவர்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பட சம்மந்தப்பட்ட தகவல் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.           

 


ஜீவாவின் 30வது படத்தின் புதிய தகவல்


  Tags : 
 • jiiva joined as motta siva ketta siva director sairamani
 • sai ramani new film
 • jiiva mew film updates
 • jiiva new film official
 • actor jiiva new film
 • jiiva 30
 • jiiva 29
 • actor jiiva next project
 • actor jiiva next film
 • ஜீவாவின் 30வது படத்தின் புதிய தகவல்
 • ஜீவாவின் 30வது பட தகவல்
 • மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குனர் சாய் ரமணி
 • சாய் ரமணி இயக்கத்தில் ஜீவாவின் புதிய படம்
 • சாய் ரமணி இயக்கத்தில் இணைந்த ஜீவா
 • ஜீவாவின் புது பட தகவல்
 • ஜீவாவின் 30வது படம்
 • மொட்ட சிவா கெட்ட சிவா
 • ஜீவாவின் அடுத்த பட தகவல்