விரைவில் தாய்லாந்து பறக்கவுள்ள கொரில்லா படக்குழு

By : Velu       Published On : Feb 11, 2018 22:22 IST    
gorilla movie shooting stills gorilla movie shooting stills

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கியது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை அடுத்து தாய்லாந்தில் ஒரு மாதம் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து செல்ல உள்ளனர்.தாய்லாந்தில் தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் ஏப்ரல் மாதத்தில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்திற்கு இயக்குனர் டான் சாண்டி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார். ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொள்ள வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்க உள்ளது. இந்தியாவில் ஒரு நடிகருடன் சிம்பன்சி குரங்கு நடிப்பது இதுவே முதன்முறை. கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.