காடுகளில் சாகசத்தை நிகழ்த்தும் நடிகர் மாதவனின் புதிய படம்

madhavan new movie with director sarkunam

 இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் மாதவன்,  திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர் மணிரத்தினத்தின் 'அலைபாயுதே' திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலம் ஆனார்.பிறகு இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த '3 இடியட்ஸ்' மாபெரும் வெற்றி பெற்றது. சிறிது காலம் நடிப்பில் விலகிய இவர் 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான 'இறுதி சுற்று' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மரியாதையும் நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவர் தற்போது 'களவாணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சற்குணம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இவர் வாகை சூடவா, நையாண்டி, மஞ்சப்பை, டோரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆரஞ்சு மிட்டாய், ரெக்க போன்ற படங்களை தயாரித்த கணேஷ் தயாரிக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் சற்குணம் கூறும்போது "காடுகளில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மங்கோலியா, தாய்லாந்து, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் சண்டை கலைஞராக ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 (Harry Potter and the Deathly Hallows Part 2) மற்றும் ட்ராகுலா அண்டோல்டு (Dracula Untold)" போன்ற படங்களில் பணியாற்றிய க்ரே பிரிட்ஜ் பணியாற்றுகிறார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான படமாக உருவாகும். இந்த படம் ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.


காடுகளில் சாகசத்தை நிகழ்த்தும் நடிகர் மாதவனின் புதிய படம்


  Tags : 
 • actor madhavan new action thriller film
 • actor madhavan new jungle action adventure film
 • actor madhavan jungle film
 • actor madhavan first movie
 • actor madhavan history
 • greg burridge joined with madhavan new movie
 • madhavan new movie with director sarkunam
 • dravula untold movie fight master
 • madhavan first movie
 • madhavan history
 • madhavan tv shows
 • madhavan 3 idiots movie
 • மாதவன்
 • மாதவன் வாழ்க்கை வரலாறு
 • மாதவன் முதல் படம்
 • மாதவன் தொலைக்காட்சி நிகழ்ச்சி
 • களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் மாதவன்
 • director sarkunam movies
 • இயக்குனர் சற்குணனின் புதிய படம்