ads

பிரபுதேவாவின் புதிய படத்தில் நடிகர் சல்மான் கான்

prabhu deva salman khan new movie dabangg 3

prabhu deva salman khan new movie dabangg 3

புதுமுக இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'குலேபகாவலி'. இந்த படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா இணைந்துள்ளார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை 'அறம்' படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர், இசை, வீடியோ பாடல்கள் போன்றவை வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமாக அதிகப்படுத்தியுள்ளது. நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய பிரபுதேவா, 1989 ஆவது ஆண்டில் வெளியான 'இந்து' திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் 'போக்கிரி', 'வில்லு' உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் இவருடைய ஆட்டத்திற்கு இன்று வரை பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இவருடைய நடிப்பில் 'குலேபகாவலி' படத்தை தொடர்ந்து 'யங் மங் சங்', 'மெர்குரி', 'சார்லி சாப்ளின்-2' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது.

இது குறித்து அவர் கூறியது "திரைப்படங்கள் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். மறுபடியும் கண்டிப்பாக படம் இயக்குவேன். நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ள தாபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார். பிரபுதேவாவின் இயக்கத்தில் சல்மான் கான் 'வான்டெட்' படத்தில் நடித்துள்ளார். மேலும் சல்மான் கானின் தபாங் படத்தின் இரண்டு பாகங்களும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

பிரபுதேவாவின் புதிய படத்தில் நடிகர் சல்மான் கான்