தனுஷ் இயக்கத்தில் இணையும் நான் ஈ புகழ்

By : Rathiga       Published On : Feb 13, 2018 15:29 IST    
sudeep joins dhanush movie sudeep joins dhanush movie

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர் போன்ற திறமைகளை கொண்டுள்ள தனுஷ் தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் காதலை மையமாக கொண்டு உருவாகி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா, வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, பாலாஜி மோகன் இயக்கத்தில் தர லோக்கல் கெட்டப்பில் மாரி 2, ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’, பெயரிடப்படாத கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில் குமாரின் புதிய படங்கள் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறது.      இந்நிலையில் பா.பாண்டி படத்தினை தொடந்து இரண்டாவது முறையாக தனுஷ் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வந்தது. மேலும் இப்படத்தினை பிரபல 'தேனாண்டாள் பிலிம்ஸ்' தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். இன்னும் பெயரிடப்படாத தனுஷின் 37வது படமான இப்புது படத்தில் கலை இயக்குனராக லால்குடி இளையராஜா இணைந்துள்ளார். ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் 'நான் ஈ' புகழ் சுதீப் இணைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தமிழில் 'முடிஞ்சா இவன புடி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.மேலும் இவர் திரையுலகில் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். இவரது சிறந்த படங்களுக்கு கர்நாடக அரசு திரை விருதும் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   


தனுஷ் இயக்கத்தில் இணையும் நான் ஈ புகழ்


  Tags :