தானா சேர்ந்த கூட்டம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா

thaana serntha kootam pre release event

நடிகர் சூர்யாவின் 35 வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவர  உள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை, வீடியோ பாடல் போன்றவை வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் 'கேங்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' தமிழில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சிகளில் நடிகர் சூர்யா நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா "இந்த படத்தின் மூலம் படப்பிடிப்பின் போது  நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். இதுவரை எனது நடிப்பில் வெளிவந்த படங்களில் இந்த படம் மாறுபட்ட புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் இந்த படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த படத்தில் அனைவரும் என்னை பார்த்து புதுமையாக இருக்குறீர்கள், என்றனர். அதற்கு முழு காரணம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். எனக்கு முன்பு போல் சாதாரணமாக வெளியில் சென்று டீ குடிக்க வேண்டும், என்று ரொம்ப நாளாக ஆசை உண்டு.அதை தற்போது விக்னேஷ் சிவன் நிறைவேற்றியுள்ளார். சாதாரணமாக 700 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து ஒரு நடிகனாகி இப்போது இந்த இடத்தை அடைந்துள்ளேன். என்னாலே இந்த இடத்தை அடைய முடியும் என்றால் நிச்சயம் உங்களால் இதை விட பெரிய இடத்தை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. எது நடந்தாலும் அன்போடு பழகுவோம்." என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சூர்யா தனது ரசிகரின் காலில் விழும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event
thaana serntha kootam pre release event

தானா சேர்ந்த கூட்டம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா


  Tags : 
 • thaana serntha kootam movie updates
 • thaana serntha kootam movie
 • actor surya
 • actress keerthi suresh
 • comedy actor senthil
 • actor karthik
 • actress ramya krishnan
 • thaana serntha kootam movie pre release event
 • surya speech on thaana serntha kootam pre release event
 • suriya speech on tsk pre release event
 • tsk pre release event
 • tsk pre release event videos photos
 • தானா சேர்ந்த கூட்டம்
 • தானா சேர்ந்த கூட்டம் இசை வெளியீடு
 • தானா சேர்ந்த கூட்டம் பொங்கல் ரிலீஸ்
 • தானா சேர்ந்த கூட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு
 • தானா சேர்ந்த கூட்டம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா
 • தானா சேர்ந்த கூட்டம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி
 • actor suriya
 • suriya speech on thaana serntha kootam pre release event