நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்

surya new movies updates

முன்னணி நடிகரில் ஒருவரான சூர்யா, 1997-ஆம் ஆண்டு வெளியான 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவருடைய இயற்பெயர் சரவணன். 'நேருக்கு நேர்' படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் மூன்று முறை பேரழகன், வாரணம் ஆயிரம், 24 போன்ற படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதை வென்றுள்ளார். 'நந்தா' படத்தில் இவருடைய வித்தியாசமான கதாபாத்திரத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இவருடைய தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, பசங்க 2, 24, மகளிர் மட்டும் போன்ற படங்கள் இவருக்கு பெருமை சேர்த்தது.சமூக ஆர்வலர்களில் ஒருவரான இவர் 'அகரம் அறக்கட்டளை' மூலம் பல்வேறு சமூக நலன்களை தமிழக மக்களுக்கு செய்து வருகிறார். மேலும் 2003-ஆம் ஆண்டு வெளிவந்த 'பிதாமகன்' படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு திறமை, நடனம் போன்றவை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படத்தின் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். தற்போது வரை வெளிவந்த இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படம் 'ஸ்பெஷல் 26' படத்தின் மைய கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இவருடைய அடுத்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளனர். இதனை அடுத்து இவருடைய 37 வது படத்தை இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கவுள்ளார். அயன், மாற்றான் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணையவுள்ளது. மேலும் இவருடைய 38 வது படத்தை '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய 39 வது படத்திற்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 படத்தை இயக்கிய ஹரியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்


  Tags : 
 • actor suriya new movies announcement
 • suriya new movies updates
 • actor suriya filmography
 • suriya first movie
 • suriya agaram foundation
 • suriya real name
 • suriya 36 movie new updates
 • suriya join ayan maatran movie director
 • suriya 37th movie director kv anand
 • suriya 38th movie director vikram kumar
 • suriya 39th movie director hari
 • நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்
 • சூர்யா 36 படத்தின் தகவல்
 • சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை
 • சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
 • சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர்
 • சூர்யாவின் பிதாமகன் படம்
 • கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37வது படம்
 • இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் 38வது படம்
 • இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யாவின் 39வது படம்