ads

'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி

'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி

'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 'ஜூங்கா'. ஜூங்கா படத்தின் புகைப்படங்களை எடுத்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிக படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் இணைந்து ஜூங்கா வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 'இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குனர் கோகுலும் இணைந்தனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனை அடுத்து 4 வருடங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியும் இயக்குனர் கோகுலும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி மகா கஞ்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் அவரது மகன் சூர்யா நடித்துள்ளார். ஏற்கனவே சூர்யா விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக 'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து மற்றொரு கதாநாயகியாக 'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.   

'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி