நடிகர் விக்ரம் பிரபுவின் பக்கா ட்ரைலர் வெளியீடு

pakka movie official trailer

நடிகர் விக்ரம் பிரபு 'கும்கி' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துறை, இது என்ன மாயம், வாகா, நெருப்புடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'பக்கா'. இந்த  படத்தை புதுமுக இயக்குனர் எஸ் எஸ் சூர்யா இயக்கியுள்ளார். இந்த படத்தை பென் கன்சார்டியம் ஸ்டுடியோஸ் சார்பில் டீ சிவகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ளார்.சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி சசிகுமார்எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி ஆகியோர் இணைந்துள்ளனர். 'நெருப்புடா' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நிக்கி கல்ராணி விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன்  முக்கிய கதாபத்திரத்தில் சிங்கம் புலி, சூரி, சதிஷ், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு டோனியாகவும், நிக்கி கல்ராணி ரஜினியாகவும் வலம் வருகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு 'துப்பாக்கி முனை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

pakka movie official trailer

நடிகர் விக்ரம் பிரபுவின் பக்கா ட்ரைலர் வெளியீடு


  Tags : 
 • actor vikram prabhu new movie pakka trailer
 • pakka movie official trailer release
 • pakka movie cast
 • pakka movie heroines
 • vikram prabhu new movie pakka release date
 • pakka movie songs
 • vikram prabhu first film
 • vikram prabhu ss surya pakka movie
 • vikram prabhu pakka movie trailer
 • நடிகர் விக்ரம் பிரபுவின் பக்கா ட்ரைலர் வெளியீடு
 • பக்கா ட்ரைலர்
 • விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகும் பிந்து மாதவி நிக்கி கல்ராணி
 • nikki galrani joines again vikram prabhu in pakka movie
 • விக்ரம் பிரபு முதல் படம்
 • புதுமுக இயக்குனர் எஸ் எஸ் சூர்யாவின் பக்கா ட்ரைலர்