ads

நடிகையர் திலகம் படத்தில் இணைந்த அனுஷ்கா அர்ஜுன் ரெட்டி நாயகன்

Actress Anushka acting as veterian actress Bhanumathi role in Nadigaiyar Thilagam movie

Actress Anushka acting as veterian actress Bhanumathi role in Nadigaiyar Thilagam movie

மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், 'மகாநதி' என்ற தலைப்பில் தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சாவித்திரியின் சிறுவயது சம்பவங்கள், திரையுலகில் எப்படி அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார், நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, சொத்தை இழந்து எப்படி வறுமையில் வாடி இறந்தார் போன்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம் பெறுகிறது.

இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக தெலுங்கில் நடிகர் நாணி நடிப்பில் வெளிவந்த 'எவடே சுப்ரமண்யம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிய இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவருடன் நடிகை சமந்தா பத்திரிகை நிருபராக நடித்து வருகிறார்.

சாவித்திரி வாழ்க்கை கதையை சமந்தா எடுத்து சொல்வது போன்று திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. சாவித்ரியின் கணவராக நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது படத்தில் நடிகை அனுஷ்காவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அனுஷ்கா மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை பானுமதி, சாவித்ரிக்கு நெருங்கிய தோழியாக இருந்து அவருக்கு பல உதவிகள் செய்துள்ளார்.

விரைவில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க உள்ளனர். மேலும் நடிகர் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் நாயகன்  விஜய் தேவரகொண்டாவும், நடிகர் எஸ்வி ரங்காராவ் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மோகன்பாபுவும் நடிக்கிறார்கள். முன்னதாக சில்க் சுமிதா வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் வந்து தேசிய விருது பெற்றது. தற்போது சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகிறது.

நடிகையர் திலகம் படத்தில் இணைந்த அனுஷ்கா அர்ஜுன் ரெட்டி நாயகன்