மாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த வரலட்சுமி

varalakshmi joines maari 2 movie shooting

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி  வருகிறது. இந்த படம் முதன் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக சாய் பல்லவி களமிறங்கியுள்ளார்.



இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் வில்லியாக களமிறங்கியுள்ள வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான அறிவிப்பை டிவிட்டரில் படக்குழு தெரிவித்துள்ளது.



இந்த படத்தில்  வரலட்சுமி முதன் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா, டேவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட  பலர் நடிக்க உள்ளனர். நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.



இந்த படத்தின் ஒரு பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா தனது தந்தையான இசைஞானி இளையராஜாவை பாட வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் மார்ச் மாதத்தில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை வெளிவரவுள்ளது.

maari 2 movie 2nd schedule shooting begins

மாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த வரலட்சுமி