அதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்

adivi sesh release tik tik tik movie telugu teaser

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தினை வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தினை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இப்படம் இந்தியாவின் முதல் விண்வெளியை சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இப்படத்தில் ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.மேலும் இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி அவரது மகன் ஆரவ் ஜெயம் ரவியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தினை தெலுங்கு திரையுலகில் அதே தலைப்பில் வெளியிட உள்ளனர். சக்தி சவுந்தர் ராஜன் இயக்கதில் ‘ஜபக்’ஸ் மூவீஸ்’தயாரிப்பு நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் யுவனின் 100வது படமாகும். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணியையும், ரதீப்.E.ராகவ் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் கடந்த நாட்களில் வெளிவந்த இப்படத்தின் தெலுங்கு போஸ்டரை தொடர்ந்து நாளை காலை 10மணிக்கு இப்படத்தின் டீசரை தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் வெளியிட உள்ளார். நடிகர் அதிவி சேஷ் நடிப்பில் 2016-இல் 'க்ஷணம்' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்யப்பட்டு 'சத்யா' என்ற பெயரில் வெளீயிடப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சிபிராஜ் நடித்துள்ளார். மேலும் இவர் இயக்குனர் ராஜமௌலியின் பிரமாண்ட படமான 'பாகுபலி' படத்தில் வில்லனான பல்வாள் தேவனுக்கு மகனாக நடித்துள்ளார். 

adivi sesh release tik tik tik movie telugu teaser

அதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்


  Tags : 
 • jaya ravi tik tik tik telugu teaser release from tomorrow 10am
 • tik tik tik telugu teaser release from tomorrow 10am
 • tik tik tik telugu teaser release
 • tik tik tik
 • jaya ravi tik tik tik telugu teaser release
 • tik tik tik telugu teaser will be launched
 • tik tik tik telugu teaser launched
 • தெலுங்கில் வெளியாகும் டிக் டிக் டிக் படத்தின் டீசர்
 • டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்
 • நாளை வெளியாகும் டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்
 • டிக் டிக் டிக் தெலுங்கு டீசர் வெளியீடு
 • ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்
 • இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படம்
 • விண்வெளி சார்ந்த படம்
 • actor adivi sesh kshanam movie
 • actor adivi desh role in bahubali movie
 • அதிவி சேஷ் வெளியிடும் டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்
 • அதிவி சேஷ் வெளியிட்ட டிக் டிக் டிக் தெலுங்கு டீசர்