ஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்

amy jackson joins slman khan kick 2

கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் திரையுலகில் எமி ஜாக்சன் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த 'ஐ' படத்தின் மூலம் Asiavision விருது வழங்கப்பட்டது. இவரது முதல் படமான 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 'தாண்டவம்' படத்திற்கும் பிலிம் பேர் விருது பறித்துரைத்தது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற திரையுலகிலும் நடித்துள்ளார்.               



தற்பொழுது சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் '2.0' படத்தில் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து எமி சாக்சன் ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. சல்மான் நடிப்பில் கடந்த 2014ல் வெளிவந்த 'கிக்' படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கிக் 2' படத்தில் நாயகியாக நடிப்பதற்கு எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


ஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்


  Tags :