ads

தடம் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அருண் விஜய்

arun vijay upcoming movie thadam wrap up

arun vijay upcoming movie thadam wrap up

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தடம்'. க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேட கெட்டப்பை மேற்கொண்டுள்ளார். முதல் முறையாக இப்படத்தின் மூலம் இரு வேடத்தை கையாண்டு வரும் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாகவும், வில்லன் கெட்டப்பையும் சிறப்பான தோற்றத்தில் நடித்ததோடு ரசிகர்களை மிரள வைக்கும் சில சாகசத்திலும் ஈடுபட்டுள்ளார். முன்பு நடைபெற்ற கொலை வழக்கை காவல் துறை அதிகாரி அருண் விஜய் விசாரித்து வருகிறார். எந்த வித தடயமும் கிடைக்காத வகையில் அனைவரும் வியக்கும் விதமாக இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு ட்விஸ்டை கையாண்டுள்ளார். இதன் மூலம் கொலை வழக்கில் ஈடுபட்டிருந்த வில்லனை காவலர் அருண் விஜய் பிடிக்கிறார்.   

காவல் துறை அதிகாரி அருண் விஜய் வில்லனை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளும் அதிரடி சாகசம் படத்தினை பார்க்கும் போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அருண் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'குற்றம் 23' படத்தினை காட்டிலும் மாறுபட்ட தோற்றத்தில் 'தடம்' உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான பாடல் காட்சிகளை படமாக்கப்பட்டு வருவதாக அருண் விஜய் அவரது ட்விட்டரில் பதிவு செய்ததோடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று (7.2.2018) முடிவடைந்து இருப்பதாக நடிகர் அருண் விஜய் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

தடம் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அருண் விஜய்