ads

அதர்வாவின் புது பட டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

atharvaa new film title boomerang

atharvaa new film title boomerang

ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் 'இவன் தந்திரன்'. இந்த படத்தின் மூலம் கெளதம் கார்த்திக் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் புது படத்தின் தகவல் சில நாட்களுக்கு முன்பு  வெளிவந்துள்ளது. அதில் நாயகனாக அதர்வா நடிக்க இவருக்கு ஜோடியாக 'என்னை நோக்கி பாயும் தோட்டா' நாயகி மேகா ஆகாஷ் இணைந்திருப்பதாக தகவலில் வெளியானது. மேலும் இவர்களுடன் இணைந்து காமெடியில் சதிஷ் மற்றும் ஆர்ஜே. பாலாஜி இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு 'பூமராங்' என்று தலைப்பினை வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் மூலம் டைட்டில் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழு இன்று படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜையை நடத்தினர். பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.    

'MKRP புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஆர்.கண்ணனனுக்கு  சொந்தமான ‘மசாலா பிக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரதன் இசையமைக்க உள்ளார். இவர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிட்ட தக்கது. மேலும் இந்த படத்தில் பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.  

மேலும் அதர்வா தற்பொழுது பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் செம போத ஆகாத, ராஜமோகன் இயக்கத்தில் ருக்குமணி வண்டி வருது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இமைக்கா நொடிகள், பாமேஷ் இயக்கவிருக்கும் ஒத்தைக்கு ஒத்த போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் சில படங்களின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.      

atharvaa new film pooja stillsatharvaa new film pooja stills
atharvaa new film poojaatharvaa new film pooja

அதர்வாவின் புது பட டைட்டிலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்