அட்டகத்தி தினேஷின் புது படத்தின் தகவல்

attakathi dinesh new film kalavani mappilai pooja

கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் தினேஷ் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் கூக்கு, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒரு நாள் கூத்து, உள்குத்து போன்ற படங்கள் நல்ல வெற்றியை ரசிகர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிந்தார். இவரது நடிப்பில் வெளிவந்த 'அட்டகத்தி' படத்திற்கு சிறந்த நடிகருக்கான விஜய் மற்றும் சீமா விருது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 'கூக்கு' படத்திற்கும் சிறந்த நடிகருக்கான விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் படத்தில் நல்ல வெற்றி பெற்றதின் மூலம் அட்டகத்தி தினேஷ் என்ற அடைமொழி பெயரும் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது.     இந்நிலையில் 'உள்குத்து' படத்தின் வெற்றியை தொடந்து தற்பொழுது மற்றொரு புது படத்தில் நடிப்பதற்கு அட்டகத்தி தினேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை காந்தி மணிவாசகம் என்பவர் இயக்கவுள்ளார். இவர் மறைந்த முன்னாள் இயக்குனர் மணிவாசகத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தினை 'ராஜபுஷ்பா பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பில் ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரிக்கவுள்ளார்.  இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக அதிதி மேனன் இணைய  இவர்களுடன் ஆனந்தராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மகாநதி சங்கர் மற்றும் முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.  களவாணி மாப்பிளை என்ற தலைப்பினை வைத்துள்ள இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். இவருடன் N.R.ரகுநந்தம் இசையமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பிற்கான  சிறப்பு பூஜை இன்று (7.2.2018) நடைபெற்றதோடு வருகிற பிப்ரவரி 15ம் தேதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வலைத்தளத்தின் மூலம் வெளியிட்டுள்ளது.            

attakathi dinesh new film pooja stills
attakathi dinesh new film pooja stills 1
attakathi dinesh new film pooja stills 2

அட்டகத்தி தினேஷின் புது படத்தின் தகவல்