பொங்கல் ரேசில் இருந்து விலகிய படங்கள்

bhasker oru rascal movie release

பொதுவாக திரைப்படங்கள் பண்டிகை, விடுமுறை காலங்களில் வெளிவரும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவர உள்ள படங்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விஜய சந்தர் இயக்கத்தில் விக்ரமின் 'ஸ்கெட்ச்', சித்திக் இயக்கத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவாவின் 'குலேபகாவலி', பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலின் 'மன்னர் வகையறா' மற்றும் முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் 'மதுர வீரன்' உட்பட பல படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ளது.    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பொங்கல் ரேசின் படங்களின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தற்பொழுது இறுதி நிலையை எட்டியுள்ளது. இதில் தற்பொழுது 'தனி ஒருவன்' அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் விமலின் மன்னர் வகையறா என இரு படங்கள் பொங்கல் ரேசில் இருந்து திடீரென்று விலகியுள்ளது. இந்நிலையில் பொங்கலுக்கு சூர்யா, பிரபு தேவா, விக்ரம் மற்றும் சண்முக பாண்டியன் இவர்களின் படங்கள் மட்டும் மோத உள்ளது.        

mannar vagaiyara movie release

பொங்கல் ரேசில் இருந்து விலகிய படங்கள்