நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

natchathira vizha 2018 celebrity stills

'நட்சத்திர விழா 2018' வரும் ஜனவரி 6 ஆம் தேதி (நாளை) மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றன. இதில் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோர் மலேசியா கலைஞர்களுடன் இணைந்து இந்த நட்சத்திர விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் முக்கியமாக திரையுலக நட்சத்திரங்களுக்கும், மலேசியா கலைஞர்களுக்கும் கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி போன்றவை நடைபெற உள்ளது. இதனை காண 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் புக்கிட் ஜாலில் மைதானத்தில் ஒன்றிணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆசியாவிலேயே மிக அதிகமான திரையுலக நட்சத்திரங்களை கொண்ட நிகழ்ச்சி இந்த 'நட்சத்திர விழா 2018' அமையும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து திரையுலகையும் மிரள வைக்கும் விழாவாகவும், பல்வேறு மலேசியா கலைஞர்கள் அரங்கத்தை அதிர வைக்க உள்ளனர் என்று மை ஈவென்ட்ஸ் இண்டெர்னேஷனல் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சாஹூல் ஹமீட் டாவூட் தெரிவித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சூர்யா,விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், நயன் தாரா, தமன்னா, மோகன்லால், நாகர்ஜூன், மம்முட்டி, போன்ற தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்பட நட்சத்திரங்களுடன் இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ், அனிரூத்,ஹரிசரண், ஸ்வேதா மோகன், ரஞ்சித், நரேஷ் அய்யர், ஸ்ரீகாந்த், ஜிவி பிரகாஷ், இமான், தமன், பாடகர்கள் கார்த்திக், சின்மயி உட்பட மேலும் பலர் அந்த நட்சத்திர விழாவில் பங்கேற்க உள்ளனர்.முன்னணி நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்பதாக தெரிவித்து சமூக வலைத்தளத்தில் விடியோவை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சில் ஒரு நல்ல பார்த்து சொல்றேன், இரும்புத்திரை, ஜூங்கா, சண்டக்கோழி 2 போன்ற படங்களின் இசை வெளியீடு, டீசர் போன்றவை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள நட்சத்திர விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஏராளாமான பிரபலங்கள் வருகை தந்து தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு வருகின்றனர்.

natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills
natchathira vizha 2018 celebrity stills

நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்


  Tags : 
 • natchathira vizha 2018 celebrities cricket league
 • natchathira vizha 2018 stills
 • audio teaser release in natchathira vizha 2018
 • natchathira vizha 2018
 • rajini in natchathira vizha 2018
 • celebrities stills in natchathira vizha 2018
 • oru nalla naal paathu solren movie audio launch in natchathira vizha 2018 at january 6th malaysia
 • irumbu thirai movie audio launch at natchathira vizha 2018
 • sandakozhi 2 movie teaser launch in natchathira vizha 2018
 • junga first look teaser in natchathira vizha 2018
 • நட்சத்திர விழா 2018
 • நட்சத்திர விழாவில் வெளிவரும் ஷங்கரின் 2.0 டீசர்
 • நட்சத்திர விழாவில் சண்டக்கோழி 2 படத்தின் டீசர்
 • நட்சத்திர விழாவில் விஜய் சேதுபதியின் ஜூங்கா பர்ஸ்ட் லுக்
 • நட்சத்திர விழாவில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இசை
 • நட்சத்திர விழாவில் இணைந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு
 • நட்சத்திர விழாவில் இரும்புத்திரை இசை வெளியீடு
 • நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்