சங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்

kamal haasan indian 2 crew

சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார், எமி ஜாக்சன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தினை அதிக பொருட் செலவில் பிரபல லைக்கா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' படத்தினை இயக்கவிருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  இந்த படத்தின் முதல் பாகத்தில் 'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்து  ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மேலும்  இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்தில் துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர். 

 

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திலும் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இவருடன் இணைந்து ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஈடுபட, டி.முத்துராஜ் கலை இயக்குனர் பணியை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் படத்தின் கான்செப்ட் ஓவிய வடிவமைப்பு பணிக்காக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மாபெரும் வெற்றிபெற்ற பாகுபலி 1 & 2 படத்தில் கான்செப்ட் ஓவிய வடிவமைப்பு பணியை மேற்கொண்டிருந்தார். இதனை தொடந்து சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்திலும் கான்செப்ட் ஓவிய வடிவமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட தக்கது.  

concept artist viswanath sundaram joines in indian 2 movie

சங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்


  Tags : 
 • concept arts viswanath sundaram
 • concept arts viswanath sundaram joined as indian 2
 • indian 2 cast
 • indian 2 crew
 • kamal haasan indian 2 crew
 • viswanath sundaram joined as indian 2
 • kamal haasan
 • kamal haasan political entry
 • kamal haasan political entry movie
 • kamal haasan upcoming movie indian 2
 • director shankar kamal haasan joined new movie
 • bahubali 2
 • bahubali
 • சங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் 2.0 பிரபலம்
 • விஸ்வநாத் சுந்தரம்
 • இந்தியன் 2 படத்தில் விஸ்வநாத் சுந்தரம்
 • இந்தியன் 2 படத்தின் கான்செப்ட் ஓவியர்
 • இந்தியன் 2 படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம்
 • இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபலம்
 • பாகுபலி
 • 2 point 0
 • இந்தியன் 2
 • கமல் ஹாசன்