ads

விசுவாசம் படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக இணையும் பிரபலம்

d imman to music compose viswasam

d imman to music compose viswasam

தல அஜித் குமார் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' உருவாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரீ-ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையிலும் படத்தில் இணையவிருக்கும் நடிகர் -நடிகைகள், கலைக்கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றவர்களின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. வருகிற பிப்ரவரி 22ம் தேதியில் துவங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் தல அஜித்திற்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா இணைந்துள்ளனர். இந்த தகவலை கடந்த நாட்களில் படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தனர். இயக்குனர் சிவாவை போன்று நயன்தாராவும் அஜித்துடன் நான்காவது முறையாக 'விசுவாசம்' படத்தின் மூலம் இணையவுள்ளார். 

தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ள இப்படத்தில் எடிட்டிங் பணியில் 'விவேகம்' படத்தினை தொடர்ந்து ரூபன் இணைத்திருப்பதை அவரே ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இசையமைக்கும் பணியில் அனிருத், 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இவர்களுக்கிடையில் தேர்வு நடைபெற்று இருப்பதாக கடந்த நாட்களில் வலைத்தளம் முழுவதும் தகவல் பரவி இருந்தது. இந்த தகவலை மறுக்கும் விதமாக சாம் சிஎஸ் அவரது ட்விட்டரில் இது வெறும் வதந்தியே என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை மறுத்து படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் இசையமைக்கும் பணியை டி இமான் மேற்கொள்ளவிருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் டி இமான் முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இமானின் இசையில் 100வது படமாக விண்வெளி சார்ந்த படமான 'டிக் டிக் டிக்' இடம் இடம்பெற்றுள்ளது.    

விசுவாசம் படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக இணையும் பிரபலம்