ads

விஷாலுடன் படத்தில் இணைந்த தனுஷ்

dhanush sing vishal movie

dhanush sing vishal movie

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிப்பில் 2005ம் ஆண்டு சண்டகோழி  வெளிவந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட கால இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் துவங்கியுள்ளது. சண்டகோழி 2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரவாரத்தோடு நடைபெற்று இருக்கிறது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ராஜ்கிரண், சூரி, அர்ஜய் உள்பட பலர் நடிக்க இருக்கின்றனர்.          

இந்நிலையில் மித்ரன் இயக்கி வரும் 'இரும்பு திரை' படத்தில் விஷால் தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. அதனை அடுத்து சண்டகோழி 2 படத்தின் படப்பிடிப்பில் விஷால் இணையவுள்ளார். விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தில்  யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்  நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். 

  

விஷாலுடன் படத்தில் இணைந்த தனுஷ்