இயக்குனர் அமீர் வெளியிட்ட அருவா சண்ட டீசர்

aruva sanda movie teaser

இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'அருவா சண்ட'. இவர் சிலந்தி, ரணத்தந்த்ரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயரிப்பாளர் வி ராஜா வைட் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகம் ராஜா அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் மாளவிகா மேனன், கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், காதல் சுகுமார், ஆடுகளம் நரேன், சவுந்தர் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல் வரிகளுக்கு தரணி இசையமைத்துள்ளார். விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்த படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 



இந்த படம் தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான கபடி போட்டியையும் காதல் சண்டையையும் மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை இயக்குனர் அமீர் தற்போது வெளியிட்டு படம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இவர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவான், அன்னக்கொடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். 


இயக்குனர் அமீர் வெளியிட்ட அருவா சண்ட டீசர்