விதி மதி உல்டா படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்

ar murugadoss appreciate vidhi madhi ultaa movie

கடந்த 2016, ஏப்ரலில் வெளியான 'டார்லிங் 2' படத்தின் மூலம் பிரபலமான ரமீஷ் ராஜா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் 'விதிமதி உல்டா'. இந்த படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரமீஷ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், ஞான சம்பந்தம், சித்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை 'டார்லிங் 2' படத்தை தயாரித்த ரீதி மீடியா வொர்க்ஸ் சார்பில் நாயகன் ரமேஷ் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ள இந்த படத்திற்கு ஐ மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 5-இல் வெளிவந்தது. மனிதரின் வாழ்க்கையில் நாளை நடக்க இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்கள், வாழ்க்கையில் இது இப்படி மாறிவிட்டால் எப்படி இருக்கும் என நினைப்பவர்கள் போன்ற சுவாரஸ்யமான சம்பவங்களை காமெடி கலந்த படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜய் பாலாஜி. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ் 'சிறந்த பொழுதுபோக்கு படத்தை உருவாக்கிய விதிமதி உல்டா படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், கானா பாலா, சிட் ஸ்ரீராம் ஆகியோர் கபிலன் வரிகளில் பாடலை பாடியுள்ள்ளனர்.


விதி மதி உல்டா படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்


  Tags : 
 • vidhi madhi ultaa movie trailer
 • vidhi madhi ultaa movie reviews
 • vidhi madhi ultaa movie crews
 • vidhi madhi ultaa movie songs
 • vidhi madhi ultaa story
 • director ar murugadoss appreciate Vidhi Madhi Ultaa movie
 • gv prakash sing in vidhi madhi ultaa movie
 • gana bala song in vidhi madhi ultaa movie
 • டார்லிங் 2
 • விதிமதி உல்டா
 • இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பாராட்டிய விதிமதி உல்டா படம்
 • இயக்குனர் ஏஆர் முருகதாஸ்
 • விதிமதி உல்டா படத்தின் கதை
 • விதி மதி உல்டா படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்