இயக்குனர் கௌதம் மேனனிடம் மீண்டும் இணையும் பிரபலம்

gautham menon again team up with arun vijay

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர், சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முன்னணி நடிகர் போன்ற திறமைகளை கொண்டவர் அருண் விஜய். இவர் குழந்தை பருவத்தில் இருந்து திரையுலகில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் கெட்டப்பில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இதனை தொடந்து க்ரீம் த்ரில்லர் படமான 'குற்றம் 23' படத்தில் காவல் துறை அதிகாரியாக வளம் வந்து ரசிகர்களை மிரள வைக்கும் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'தடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று (7.2.2018) முடிந்து விட்டதாக தகவலை அருண் விஜய் அவரது ட்விட்டரில் பதிவு செய்திருந்ததோடு, அடுத்த சிறந்த படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பதிவு செய்துள்ளார்.         



கடந்த சில நாட்களாக வலைதளம் முழுவதும் அருண் விஜய் மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அதிரடி த்ரில்லர் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவி இருந்தது. நடிகர் அருண் விஜய் தற்பொழுது வெளியிட தகவல் இந்த படத்திற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். காதலை மையமாக கொண்டு உருவாகும் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கும். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' காதல் கலந்த ஆக்சன் படம் ரசிகர்கள் வெகுவான வரவேற்பினை கொடுத்திருந்தனர். இந்த வெற்றி படங்களை தொடந்து தற்பொழுது அதிரடி த்ரில்லர் படமான துருவ நட்சத்திரம், காதல் கலந்த ஆக்சன் படமான என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களை இயக்கிவருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது.       


இயக்குனர் கௌதம் மேனனிடம் மீண்டும் இணையும் பிரபலம்


  Tags :