ads

மலையாளத்தில் மெகா ஹிட் நடிகருடன் இணையும் கவுதம் மேனன்

gautham menon fahadh faasil team up

gautham menon fahadh faasil team up

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக விளங்கி வரும் கவுதம் மேனன், படங்களை இயக்கிவருவதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈடுபட்டு நடிப்பிலும் சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறார். இவர் முதல் முதலில் மின்சார கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானதை தொடந்து பல வெற்றி படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் 'நாம்' என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். மேலும் கொச்சியில் நடைபெற்று வந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திருந்தார்.  

இந்த படத்தினை தொடர்ந்து மலையாள முன்னணி நடிகரான பகவத் பாசில் நடிக்கவுள்ள 'ட்ரான்ஸ்' என்ற படத்தின் முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் 'ப்ரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நடிப்பதாக இருந்தது. சில காரணத்தினால் அல்போன்ஸுக்கு பதிலாக கவுதம் மேனன் இணைந்துள்ளார். அன்வர் ரஷீத் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இப்படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய பட்டியலை விரையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படத்தின் நாயகன் பகவத் பாசில் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.       

மலையாளத்தில் மெகா ஹிட் நடிகருடன் இணையும் கவுதம் மேனன்