ads

மிஸ்டர் சந்திரமௌலி ஷூட்டிங்

mr chandramouli movie shooting

mr chandramouli movie shooting

விஷால் நடிப்பில் 'நான் சிவப்பு மனிதன்' படத்தினை இயக்கிய இயக்குனர் திரு, அதனை தொடர்ந்து நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல் முதலாக இணைத்து 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் பல திரைப்பட வட்டாரங்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் இணைந்து மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட உள்ளனர்.     

கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் நாயகியாக நடிக்க, இவர்களுடன் இணைந்து பிரபல இயக்குனர்கள் மஹேந்திரன் - அகத்தியன், சந்தோஷ் பிரசாத், சதிஷ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கின்றனர். 

இந்நிலையில் படத்தின் முதல் படப்பிடிப்பு சென்னையில் இன்று நடைபெற இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை  நடிகர் சதிஷ் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.     

மிஸ்டர் சந்திரமௌலி ஷூட்டிங்