நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த ஹன்சிகா

hansika joines in vikram prabhu new movie thuppakki munai

இந்திய திரைப்பட நடிகையான ஹன்சிகா மங்களூரை சேர்ந்தவர். இவர் தாய்மொழி சிந்து. இருந்தபோதிலும் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு போன்ற ஆறு மொழிகளுக்கு மேல் சரளமாக பேசக்கூடியவர். 'ஷக்கலக்கா பூம் பூம் (shakalaka boom boom)' என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார். (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்).அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் (Des Mein Niklla Hoga Chand) என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா ( Koi Mil Gaya) திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து 2007-இல் வெளிவந்த 'தேசமுதுரு' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி விருதை பெற்றார். இதனை அடுத்து தமிழில் நடிகர் தனுசுடன் 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமானார். பின்னர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் தமிழில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது நடிகர் அதர்வாவுடன் இணைந்து பெயரிடப்படாத படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சிவாஜி கணேசன் வாரிசான விக்ரம் பிரபு நடிக்கும் 'துப்பாக்கி முனை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு வி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ் வி முத்து கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார்.

thuppakki munai first look poster

நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த ஹன்சிகா


  Tags : 
 • hansika motwani native
 • hansika motwani movie histor
 • hansika motwani tamil debut movie mappillai
 • hansika motwani telugu debut Desamuduru movie
 • hansika malayalam debut
 • hansika malayalam debut movie villain
 • Shaka Laka Boom Boom hansika episode
 • Koi Mil Gaya movie hansika scene
 • hansika joines vikram prabhu new movie thuppakki munai
 • hansika motwani joined as katteri teams
 • thuppakki munai first look poster
 • ஹன்சிகா
 • நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த ஹன்சிகா
 • ஹன்சிகாவின் தமிழ் முதல் படம் மாப்பிள்ளை
 • ஹன்சிகாவின் தெலுங்கு முதல் படம் தேசமுதுரு
 • ஹன்சிகாவின் மலையாள முதல் படம் வில்லன்
 • ஹன்சிகாவின் புது படம்