இரும்பு திரை படத்தின் ஆங்கிரி பேர்ட் ப்ரோமோ வெளியீடு

irumbu thirai angry bird promo release

புதுமுக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால், சமந்தா, அர்ஜுன் போன்றவர்கள் நடிப்பில் உருவாகி  வரும் படம் 'இரும்பு திரை'. இந்த படத்தின் மூலம் விஷால் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறார். மேலும் இவருடன் இணைந்து சமந்தா மனநல மருத்துவராகவும் 'ஆக்சன் கிங்' அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்தினை வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி வெளியிடுவதாக விஷால் அவரது ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டிருந்தார். தற்பொழுது படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.     கடந்த நாட்களில் படக்குழு வெளியிட்ட போஸ்டர்,  டீசர், இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் காதலர் தினத்தினை முன்னிட்டு படத்தில் இடம் பெற்ற 'Angry Bird' என்ற புது ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட உள்ளது. மேலும் விஷால், சமந்தாவின் புது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் விஷாலுக்கு சொந்தமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்து நடித்து வரும் இப்படத்தில் ஒளிப்பதிவு பணியை ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரது இசையில் இன்று வெளிவர உள்ள புது ப்ரோமோ வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.    

irumbu thirai new stills
irumbu thirai new stills 1

இரும்பு திரை படத்தின் ஆங்கிரி பேர்ட் ப்ரோமோ வெளியீடு


  Tags :