ads

ஜெயம் ரவி வெளியிட்ட டிக் டிக் டிக் படத்தின் புதிய தகவல்

jeyam ravi son on tik tik tik movie dubbing

jeyam ravi son on tik tik tik movie dubbing

வனமகன் படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் தற்பொழுது உருவாக்கி வரும் படம் டிக் டிக் டிக். இந்த படம் விண்கலனை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தியாவில் முதல் விண்வெளி சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள், திரைப்பட துறையினர் என அனைவரிடமுன்  வெகுவான எதிர்பார்ப்புகளும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்த படத்தினை சக்தி சவுந்தர் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தின் டீசர், ட்ரைலர், சிங்கிள் ட்ராக் போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.    

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ்  நடித்துள்ளார். மேலும் படத்தின் முக்கிய கேரக்டரான வில்லன் கதாபாத்திரத்தில் ஆரோன் அஜீஸ் நடிக்க மற்ற கதாபாத்திரத்தில் ஜெய பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுன், மன்ஸுர் அலி கான், வின்சன்ட் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஜெயம் ரவி மகன் ஆரவ் ஜெயம் ரவி இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.  

 ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்து வரும் இப்படத்தில் டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணியிலும், ரதீப்.E.ராகவ் படத்தொகுப்பு பணியிலும் ஈடுபட்டு வரும் இப்படத்தில் தற்பொழுது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி மகன் ஆரவ் ஜெயம் ரவி ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயம் ரவி அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.        

ஜெயம் ரவி வெளியிட்ட டிக் டிக் டிக் படத்தின் புதிய தகவல்