டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி - வீடியோ

tik tik tik movie audio launch video

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளிவரவுள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை நேமிசன்ட் ஐபக் நிறுவனம் சார்பில் இதேஷ் ஐபக் தயாரித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளையும் பிரதீப் இ ராகவ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி "முதலில் நான் விண்வெளி சார்ந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதும் யாரும் நம்பவில்லை. ரசிகர்களின் நம்பிக்கையும் ஊக்கமும் இந்த படத்தில் நடிப்பதற்கு உறுதுணையாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு செட்டை பார்த்த பிறகு தான் இந்த படத்தின் மீதான அதிகரிக்க செய்தது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் பங்களிப்பை படப்பிடிப்பு அரங்கம் எளிதாக்கியது. ஏனென்றால் விண்வெளி சார்ந்த படம் என்றால் நடிகர்களுக்கு குழப்பமும் கேள்விகளும் எழும், ஆனால் இந்த படப்பிடிப்பிற்கு போடப்பட்ட செட் உண்மையான விண்வெளி ஆய்வகம் போல் சிறப்பாக வடிவமைக்க பட்டிருந்தது. இதற்காக இந்த படத்தின் கலை இயக்குனரை பாராட்டலாம்.இந்த படத்தின் காட்சிகளை சிறப்பாக எடிட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர் அதற்காக அவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். என்னுடைய மகன் ஆரவ் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இது போல் ஒரு காட்சி இருக்கிறது நடிக்கிறாயா? என்று அவரிடம் கேட்டேன். ம்..நடிக்கலாம் என்றான். இதற்கு நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்றேன், ம்..கத்துக்கலாம் என்றான், இந்த குணம் படக்குழுவினருக்கு பிடித்திருந்தது. படப்பிடிப்பின் போது அனைவரும் நடிக்கும் காட்சியை ஸ்க்ரீனில் பார்த்து கொண்டிருப்பான். இந்த காட்சியில் நீங்க சரியா நடிக்கல, இப்படி நடிங்க..என்று கற்றுக்கொடுத்தான். " என்று அவர் தெரிவித்துள்ளார்.

tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video
tik tik tik movie audio launch video

டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி - வீடியோ


  Tags : 
 • tik tik tik movie
 • tik tik tik movie trailer release date
 • tik tik tik movie trailer
 • actor jeyam ravi
 • actress nivetha pethuraj
 • director Shakti Soundar Rajan
 • tik tik tik movie audio launch venue
 • tik tik tik movie songs
 • aarav ravi speech in tik tik tik audio launch
 • jeyam ravi speech in tik tik tik audio launch
 • டிக் டிக் டிக் படத்தின் இசையை வெளியிடும் இமான்
 • டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா
 • டிக் டிக் டிக் படத்தின் தகவல்
 • டிக் டிக் டிக்
 • டிக் டிக் டிக் ட்ரைலர் வெளியீடு
 • டிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி